தீப ஆராதனை வழிபாடு !

ஆலயங்களுக்கு செல்கிறோம், தீபாராதனைகளை வழிபடுகிறோம். அது கற்பூர தீபாராதனை என்றால் என்ன திரியில் ஏற்றப் பட்ட தீபாமாக இருந்தால் என்ன அர்த்தம் ஒன்றுதான்!!!
இறைவன் சந்நதியில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது, தீபம் ஏற்றி வழிபடுவது எது சிறந்தது? என்று சிலர் சிந்திப்பதுண்டு.
இறைவன் ஜோதி ஸ்வரூபனாக நிறைந்திருக்கிறான் என்பதே இந்த வழிபாட்டில் உள்ள கருத்து. இறைவனை அக்னி ஒளியில் தரிசிக்கும் போது மனம் தெளிவடைகிறது. இதனால்தான் கற்பூரம் அல்லது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம்.
கற்பூரம் என்பது திடப்பொருளாக இருந்து நேரடியாக ஆவியாக மாறும் தன்மை உடையது. மற்ற பொருட்கள் அக்னியின் மூலம் முதலில் கரியாகி, பின்பு சாம்பலாகி அதன் பின்னரே கரையும் தன்மை கொண்டவையாக இருக்கும். கற்பூரம் மட்டுமே நேரடியாக ஆவியாகும் திறன் உடையது என்பதால் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். தற்காலத்தில் சுத்தமான கற்பூரம் கிடைப்பது அபூர்வமாகிவிட்டது.
ஆகவே கற்பூரம் ஏற்றி சுற்றுச்சூழலை மாசு
படுத்துவதைவிட, விளக்கு ஏற்றி தீப ஒளியில் இறைவனை தரிசிப்பதே நல்லது.
எந்த முறையில் வணங்கினாலும் அக்னியின் ஒளியில் இறைவனின் திருமுகத்தை தரிசனம் செய்யும்போது மனதை அங்குமிங்கும் அலைபாயவிடாமல் முழுமையான ஈடுபாட்டோடு தரிசித்தால் முழுப்பயனையும் அடையலாம்.
May be an image of fire and text
Prepared by:
Panchadcharan Swaminathasarma
E Magazine Editor,
Modern Hindu Culture . Org
www.modernhinduculture.com
தீப ஆராதனை வழிபாடு !
Scroll to top