எங்கள் வாழ்க்கையில் நாம் நலமாக சுபீட்சமாக இருக்க பல வழிபாடுகள், ஹோமங்கள் என்று செய்து இறைவனை வழிபட்டிருப்போம், வழிபட்டுக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் ம்ருயுஞ்ஜய ஹோமம் பற்றி பார்ப்போம்.
ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன? இதனை எப்போது செய்ய வேண்டும்?
ம்ருத்யு என்றால் மரணம், ஜயம் என்றால் வெற்றி, ம்ருத்யுஞ்ஜயன் என்றால் மரணத்தை வெற்றி கொள்பவன் என்று பொருள். இந்த சொல் பரமேஸ்வரனைக் குறிக்கும். ஆயுள் விருத்தி, இளம் வயதிலேயே உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாவது, ஜாதகத்தில் கண்டம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் காலம், மரணபயம் உண்டாகும் நேரம் முதலான சூழலில் ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
தனிப்பட்ட முறையில் இல்லாமல் சாதாரணமாக குடும்பத்தில் எல்லோரும் தீர்க்காயுளுடன் வாழவேண்டும் என்ற எண்ணத்தில் குடும்ப நலன் கருதி பிரதி வருடம் ம்ருத்யுஞ்ஜய ஹோமத்தினை வீட்டினில் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள்.
மரணம் என்பது மனித வாழ்க்கையில் நிச்சயிக்கப் பட்ட ஒன்று. மரணத்தை வெல்ல எவராலும் இயலாது என்பது உண்மையே என்றாலும், மரணத்தைக் கண்டு பயப்படாமல் இருக்கும் மனவலிமையைத் தரவல்லது இந்த ம்ருத்யுஞ்ஜய ஹோமம்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர்,( E Magazine Editor)
இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம்.
Modern Hindu Culture .Org
modernhinduculture.com
ம்ருயுஞ்ஜய ஹோமம் என்றால் என்ன?