ஆன்மிக பெரியவர்கள் சொல்லிய விடயங்கள், ,ஆன்மிக நூல்கள் பலவற்றில் திரட்டிவை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நல்ல விடயங்களை தாங்கி வருவதுதான் இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவன முகநூல். www.modernhinduculture.com என்ற இணையதளத்தில் பல விடயங்கள் உண்டு ,பாருங்கள். அந்த வகையில் இன்று நாம் ‘மந்திரம்’ என்ற விடயத்தை பார்ப்போம்.
இன்று ‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ள முயலாதவர்கள் பலர் தமது வாயில் வந்ததை பேசுவதை அவதானித்துள்ளோம். மந்திரங்களை படிக்கும் போது எமது உடம்பில் உள்ள நோய்கள் அகலும். மந்திரங்கள் படிப்பவர்கள் நேரில் அதை சொல்லி உள்ளார்கள்.
சாப்பிட்டால்தான் பசி தீரும். ஆனால் பசியோடு உள்ளவனுக்கு தட்டு நிறைய சாப்பாட்டைப் பார்த்தவுடன் பசி தீர்ந்துவிட்டது போன்ற உணர்வு வருகிறது அல்லவா? அதாவது இந்த சாப்பாடு நமக்குத்தான், நம்முடைய பசி தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவனுக்குள் வந்ததும் அவன் பசி தீர்ந்தது போல் உணர்கிறான்!
அதற்காக சாப்பிடாமல் இருந்தால் பசி தீர்ந்துவிடுமா? பார்க்காமலேயே சாப்பிடவும் முடியுமா? நாம் நல்ல உணவைத்தான் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை வந்தால்தானே அவனால் நன்றாக சாப்பிடமுடியும்? அதேபோல நோய் கொண்ட மனிதனுக்குள் நம்பிக்கையை விதைப்பது மந்திரங்கள்.
நம்பிக்கை வந்தாலே பாதி நோய் குணமாகிவிடும். மிச்சம் மீதி உள்ள நோயினை தீர்ப்பது அவன் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள். ஆன்மாவின் நோயினைத் தீர்ப்பது மந்திரங்கள், உடல் நோயினை குணமாக்குவது மருந்து மாத்திரைகள். மந்திரங்களால் மனநோயையும் சேர்த்து குணப்படுத்த இயலும், மருந்து மாத்திரைகளால் உடல்நோயை மட்டுமே குணப்படுத்த இயலும்.
‘மந்திரம்’ என்றவுடன் அதை புரிந்து கொள்ளாதவர்கள்,………………………………………