உயர்ந்த மொழி சமஸ்கிருதம்!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இன்று வாட்ஸ் அப் , யு டியூப்,முக நூல் , என்று பல தொடர்பு சாதனங்கள் வந்து விட்டன. இவற்றை நல் வழியிலும் பயன் படுத்தலாம், தீய வழிகளுக்கும் பயன் படுத்தலாம். இவற்றை பயன் படுத்தி சமயங்களுக்கும், மொழிகளுக்கும் எதிரான பிரச்சார வேலைகளிலும் பலர் ஈடு பட்டுள்ளதை பார்க்கிறோம்.
உதாரணமாக சமஸ்கிருத மொழி செத்த மொழி என்றும், அது பிராமணரின் மொழி என்றும் விஷங்கள் விதைக்கப் படுவதை காணலாம். அரை குறை,தற்குறிகள் தங்களுக்கு தெரியாத விடயங்களை எழுதிக் கொள்வார்கள் தெரிந்த மாதிரி!!!
நிச்சயமாக இல்லை. அந்தணர் என்ற பிரிவினர் மட்டும்தான் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அந்தணன் என்ற தகுதியைப் பெறுவதற்காகச் செய்யப்படும் பிரம்மோபதேசத்தின்போது உபதேசிக்கப்படும் காயத்ரி மந்திரத்தை இந்த உலகத்திற்கு அருளியது க்ஷத்திரிய வம்சத்தில் தோன்றிய விஸ்வாமித்திர மகரிஷி ஆவார். ராமாயணத்தை சமஸ்கிருத மொழியில் அருளிய வால்மீகி ஒரு வேடுவன். மஹாபாரதத்தை நமக்குத் தந்த வியாச மகரிஷி ஒரு மீனவப் பெண்ணின் மகன்.
புராண காலத்து உண்மைகளை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், வரலாற்று உண்மைகளையாவது ஏற்றுக் கொள்ளலாமே! சாகுந்தலம், ரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம் முதலான சமஸ்கிருத காவியங்களைப் படைத்த கவியரசன் காளிதாசன் இடையர் வம்சத்தில் தோன்றியவர். இரண்டாம் சந்திரகுப்தனின் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாம் சந்திரகுப்தனின் அவையை அலங்கரித்த அஷ்டதிக்கஜங்களில் முக்கியமானவர் காளிதாசன். இந்த அரசனையே போஜராஜன் என்றும் அழைக்கிறார்கள். இந்த போஜராஜன் சமஸ்கிருத மொழியில் காவியங்களைப் படைத்தவன்.
prepared by Panchadcharan Swaminathasarma
உயர்ந்த மொழி சமஸ்கிருதம்!!!
Scroll to top