லிங்கங்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
உலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன சிவலிங்கங்கள் சில க்ஷேத்திரங்களில் மட்டும் காணக்கிடைக்கின்றன. பொதுவாக தென்னிந்தியாவில் ஸ்படிக லிங்கங்கள் குறைவு. ராமேஸ்வரத்தில் மிகச்சிறிய ஸ்படிக லிங்கம் இருக்கிறது.
சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பூசிக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்படிக லிங்கம் கர்நாடக மாநிலத்தில் இருப்பது சிலர் மட்டுமே அறிந்தது.
யஜுர் வேதத்தில் ‘’ஜ்யோதி ஸ்பாடிக லிங்க’’ என்று, சிவன் ஸ்படிக ரூபத்தில் இருப்பதாகச் சொல்கிறது. ‘’சுத்த ஸ்படிக சங்காஸம், வித்யா ப்ரதாயகம் சுத்தம் பூர்ண சிதானந்தம் சதாசிவமஹம் பஜே’’ என்று ருத்ராத்யாயத்தின் தியானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சுத்தமான ஸ்படிகத்தின் ஒளியுடையவரும், வித்யையைக் கொடுப்பவரும், சுத்தம், பூர்ணத்துவம், சித்தத்தில் ஆனந்தமுமான சதாசிவனைத் துதிக்கிறேன்’ என்பது இதற்கான பொருள்.
சூர்யோதயம், அஸ்தமன நேரங்களில் ஸ்படிக லிங்க பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நன்றி: நிருபமா.
prepared by panchadcharan swaminathasarma
லிங்கங்கள்
Scroll to top