தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
திருவள்ளுவர் கூறுகிறார்
”ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து”
ஆமை தனக்கு ஊறு நேராமல் தன் தலை கால்கள் ஆகியவைகளைத் தன் ஓட்டுக்குள் அடக்கிக் காத்துக் கொள்ளும். அதுபோல் ஒருவன் தன் ஐம்பொறிகளையும் தீவினை அண்டாமல் அடக்கும் திறம் பெற்றால், அது அவனுக்கு நீண்டகாலத்திற்கும் பாதுகாப்பாகும்.
நண்பர்களே நீங்கள் ஆலயங்களில் பார்த்திருப்பீர்கள் ஆமை வடிவிலான பல வடிவங்களை. அதில் ஓர் அர்த்தம் உண்டு. எவ்வளவு உயிரினங்கள் இருக்கும் போது ஏன் ஆமை இங்கு முன் எடுக்கப் படுகிறது?
ஆலயங்களுக்கு செல்லும்போது நீங்கள் ஐம்பூலன் களையும் அடக்கி மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை வணங்க வேண்டும் என்பதை இந்த ஆமை வடிவம் உணர்த்துகிறது.
ஆமை வடிவிலான ஆசனங்கள் போடப் பட்டு குருமாரும் ,சிவாச்சாரியார்கள் ,தவசிகளும் தமது வழிபாடுகளை ஆற்றுவதை பார்த்து இருப்பீர்கள்.
ஒரு இறை பணியை ஒரு குருவானவர் செய்யும் போது இந்த ஆமை வடிவிலான ஆசனத்தில் அவர் அமரும் போது ,எப்படி ஆமையானது தன் அங்கங்களை ஓட்டினுள் இழுத்துக் கொள்வது போல சிவாச்சாரியார்கள் , குருவானவர்கள் எந்த ஒரு இறை பணிகளை செய்ய ஆரம்பிக்கும் போது தமது புலன்களை ,எல்லா இந்திரிய விஷயங்களில் இருந்தும் வெளியே வரும்போது அவர்களுக்கு ஒரு ஆன்ம ஒளி பிறந்து அந்த குருவானவனுக்கு ஞானம் உண்டாகிறது.
இப்படி ஞானம் பெற்ற நிலையில் அந்த குருவானவர் முன் எடுத்து செல்லும் எந்த விடயமும் எல்லோர்க்கும் பயன் தருகிறது என்றபடியினால்தான் குருவானவர்க்கு ஆசனப் பலகையாக ஆமை வடிவிலான பலகை வழங்கப்படுகிறது.