சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா.

ஒவ்வொரு மனித உயிரையும் படைக்கும் போது, அவர்களின் வாழ்வை நிர்ணயித்த விதமாக, தலையெழுத்து எழுதிவைக்கப்படுகிறது என்பதாக ஐதீகம். தன் திருக்கரத்தில் தண்டம் வைத்திருக்கிறார் பிரம்மா. அந்தத் தண்டம், பிரம்ம தண்டம் எனப்படுகிறது.

பிரம்ம தேவரை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் உகந்தது என்றாலும் நம்முடைய ஜன்ம நட்சத்திர நாள், குரு பிரம்மா என்பதால், வியாழக்கிழமை, புத்தியில் தெளிவைக் கொடுப்பவர் என்பதால் புதன் கிழமை… இப்படியாக எந்தநாளிலும் பிரம்மாவை வணங்கித் தொழலாம்.
பிரம்மாவை, வீட்டில் இருந்தே வணங்கி வழிபடலாம். வீட்டில் உள்ள பூஜையறையில் பிரம்மாவின் திருமேனி கொண்ட படத்துக்கு, வெள்ளை நிற தாமரையால் அலங்கரிக்கவேண்டும். நெய்யால் தீபமேற்ற வேண்டும்.

பிறகு, பிரம்மாவுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை. அவர் படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, முடிந்த அளவு உச்சாடனம் செய்யலாம். 11 முறை, 108 முறை, முடிந்தால் 1008 முறை சொல்லி பூஜிக்கலாம். பிரம்ம காயத்ரி சொல்லி வழிபட்டு வந்தால், நம் வாழ்க்கையை திருத்தி அருளித்தருவார் பிரம்மா. பூர்வ ஜென்ம பாவங்களையெல்லாம் போக்கியருள்வார்.

தினமும் பிரம்மா காயத்ரியைச் சொல்லி, பிரம்மாவை மனதார வணங்கி வந்தால், உடலும் மனமும் செம்மையாகும். இதுவரை இருந்த சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். பெண்களின் தாலி பாக்கியம் நிலைக்கும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.

முக்கியமாக, முன்னோர்கள் மற்றும் தெய்வங்களால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கும். கல்வி, கலைகளில் சிறந்து திகழலாம். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம்.

நம் தலையெழுத்தை திருத்தி அருளும் ஸ்ரீபிரம்மா காயத்ரி மந்திரம்:

‘ஓம் வேதாத்மகாய வித்மஹே
ஹரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’

No photo description available.
சிவா, விஷ்ணு, பிரம்மா முதலான தெய்வங்களை மும்மூர்த்திகள் என்கிறது புராணம். இவர்களில், படைப்புக் கடவுள் என்று போற்றப்படுகிறார் பிரம்மா.
Scroll to top