தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலயங்களின் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப் படுவதை நீங்கள் பார்திருப்பீர்கள். அதைப் பற்றி இன்று அறிவோம்.
ஆகர்ஷண சக்திக்காகவே கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்படுகிறது. அதாவது ஈர்ப்பு விசை என்று நீங்கள் பொருள் கொள்ளலாம். பொதுவாக கோயில் கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். அதனால்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
அந்த கோபுரங்களில் முப்பத்து முக்கோடி தேவர்களின் சக்தியும் வந்து இறங்க வேண்டும், வானில் உள்ள தேவர்களின் சக்திகள் அனைத்தும் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத்தான் கூர்மையான முனையை உடைய கலசங்கள் வைக்கப்படுகின்றன.
பெரும்பாலும் இது தாமிரம் என்ற உலோகத்தால் உருவாக்கப்பட்டவையாக இருக்கும். தாமிரத்திற்கு ஈர்ப்பு விசை என்பது அதிகமாக இருக்கும். இயற்பியலில் இதனை என்று குறிப்பிடுவார்கள். தற்காலத்தில் செல்போன் டவர்களின் உச்சியிலும் இதுபோல கூர்மையான முனை கொண்ட கம்பியினை வைத்திருப்பார்கள்.
மின்னல் தாக்கினாலும் டவர் சேதமடையாமல் இருப்பதற்காக அந்தக் கம்பியிலிருந்து பூமிக்கு ஒரு இணைப்பை ஏற்படுத்தி எர்த் கனெக்ஷன் என்ற அமைப்பினை உருவாக்கியிருப்பார்கள். அதுபோல ஆலய கோபுரங்களில் அமைக்கப்படுகின்ற கலசங்களும் இடி, மின்னல் முதலான இயற்கைச் சீற்றங்களை தன்னுள் வாங்கிக்கொண்டு தன்னைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளை காப்பாற்றுகின்றன.
இதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். ஆக கோபுரத்தில் கலசங்கள் என்பவை இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மைக் காக்கும் பணியைச் செய்வதற்காகவும் தெய்வீக சக்தியினை உள்ளிழுப்பதற்காகவும் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன என்று புரிந்து கொள்ளலாம்
நன்றி: ஹரிபிரசாத்.