தெரிந்து கொள்வோம்:
புத்தாடை அணிவதற்குமுன்பாக, அதில் ஏதேனும் ஓரிடத்தில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?
எந்த ஒரு புதுப் பொருளை நாம் அணிந்தாலும் அது மங்களகரமாக, நமக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு அது. மஞ்சள்- குங்குமமும் சந்தனமும் மங்கல திரவியங்கள். அவற்றால், மங்கலங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம். நாம் எதன் மூலம் வாழ்கிறோமோ, அதை வணங்குவது நமது வழக்கம். அறுவடை அன்று நெல்லை மகாலட்சுமி என்று பூஜை செய்வோம். அரிசி இருந்ததால் நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வதால் பகவானை நினைக்கிறோம். எனவே, அரிசியையும் தெய்வாம்சமாகக் கருதுகிறோம். அதுவே, புத்தாடை விஷயத் திலும் நிகழ்கிறது. இந்தக் கலாசாரத்தைக் கடைப்பிடிப்பது, நல்ல விஷயம்தானே!:– நன்றி சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.
புத்தாடை அணிவதற்குமுன்பாக, அதில் ஏதேனும் ஓரிடத்தில் மஞ்சள், சந்தனம் அல்லது குங்குமம் தொட்டுவைப்பது ஏன்?