நண்பர்களே , இதுமருத்துவக் குறிப்பு, தெரிந்து கொள்வோம்:–
”`இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ என்ற பழமொழியே நமக்கு ‘கொள்ளு’வின் சிறப்பை தெரிவித்துவிடும்.
கொள்ளுப்பயறை ஊறவைத்து, அதன் நீரைக் குடித்தாலே உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையையும் குறைக்கும். கொள்ளுவில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப்பயறை ஊறவைத்தும், வறுத்தும் சாப்பிடலாம்.குழந்தைகளின் சளிப் பிரச்னைக்கு கொள்ளு சூப் கொடுத்தால் சளி காணாமல் போய்விடும். அப்படி ஓர் அருமையான மருத்துவக் குணம் இதற்கு உண்டு. குளிர்காலத்தில்தான் அதிகம் சளி பிடிக்கும். அதனால், வீட்டில் உள்ள அனைவருமே இந்த சூப் குடிக்கலாம். சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்தால் எடை குறையும். ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து, தண்ணீரில் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு வந்தாலேகூட எடை குறையும். கொள்ளு சூப் வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்துவதுடன், மாதவிடாய்க் கோளாறுகளையும் சரிப்படுத்தும். கொள்ளு ஊறிய தண்ணீரை பிரசவமான பெண்கள் குடித்தால், வயிற்றில் தேங்கியிருக்கும் பிரசவகால அழுக்கை வெளியேற்றிவிடும்.
கொள்ளுப்பயறு… எலும்புக்கும் நரம்புக்கும் நல்ல பலம் தரக்கூடியது என்பதாலேயே, கடினமான பணிகளை செய்யும் குதிரைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்தது. கொள்ளை அரைத்து பொடி செய்துகொண்டு, ரசத்தில் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம். கொள்ளு ரசம், கொள்ளுத் துவையல், கொள்ளுக் குழம்பு வைத்து ருசிக்கலாம்.