கும்பத்தில் உள்ள அர்த்தங்கள்!

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

ஒரு பூஜைக்கு ஆயத்தமாக வைக்கப் பட்டிருக்கும் கும்பத்தில் எத்தனை அர்த்தங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன பாருங்கள் நண்பர்களே!

ோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்கிறது.
குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தினங்கள் சுக்லமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குடத்தின் மேலே நெருக்கமாக சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குடத்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

கும்பத்தில் உள்ள அர்த்தங்கள்!
Scroll to top