துளசியின் மகிமை.

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:

நண்பர்களே, துளசியின் பெருமை ,மகத்துவத்தை இன்று பாப்போம்.

துளசிமாலை உயர்ந்தது. ஜபம் செய்யும் வேளையில் துளசிமாலை அணியலாம். ‘முகுந்தன் காலடி தொட்ட துளசியை முகர்ந்து பார்’ என்கிறார் குலசேகரப் பெரு மாள். 
கண்ணனின் துலாபாரத்தில் துளசி வென்றது. `உயிர் பிரியும்போது துளசி கலந்த ஜலம் அருந்தினால் மறுபிறவி கிடையாது’ என்கிறது புராணம்.

குறிப்பாகப் பெண்கள் தினமும் துளசி பூஜை செய்ய வேண்டும். லட்சுமி வசிக்கும் இடமாக துளசியைப் பார்க்கிறது புராணம். பிருந்தாவன துவாதசியில் துளசி வழிபாடு சிறப்பு.

துளசி விரதம் ஏற்கச் சொல்லுகிறது விரதகோசம். தானம் அளிக்கும்போது துளசியைச் சேர்க்கச் சொல் கிறது தர்ம சாஸ்திரம். கடவுளுக்குப் படைக்கும் நிவேதனத்தில் துளசியைச் சேர்ப்பது உண்டு. பூஜைக்கு உரிய பொருள்களில் சிறந்தது துளசி.

‘துளசி இதழ் ஒன்றை எனக்கு அர்ப்பணி; உனது யோக க்ஷேமத்தை நான் கவனித்துக் கொள்கிறேன்’ என்று வாக்குறுதி தருகிறான் கண்ணன். துளசிக்கு நிர்மால்யம் கிடையாது. வாடி வதங்கினாலும் தரம் குறையாது.
மருத்துவக் குணமும் கொண்டது துளசி. விஷக்கிருமிகளை அகற்ற உதவும். உப்புடன் கலந்த கரும் துளசி, தோல் வியாதியைக் குணப் படுத்தும். வணக்கத்துக்குரிய பொருளை மாலையாக அணிந்து கௌரவிப்பது சிறப்பு.

–நன்றி. பிரம்மஸ்ரீ.செஷாத்திரிநாத சாஸ்திரிகள்.

Image may contain: food
துளசியின் மகிமை.
Scroll to top