தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மார்கழி மாத பெருமைகள்:-
மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி என்பார்கள். அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் “மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்” என்று சொல்கிறார்.
அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த மார்கழி மாதம். அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம். ‘பீடு’ என்றால் ‘பெருமை’ என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி ‘பீடை’ என்றானது.
அதுவரை இருந்த எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும்.
ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுங்கள்….. அனைத்து செல்வங்களையும் பெறுங்கள்…..