மஹா பெரியவா சொன்ன தத்துவத்தை பாருங்கள்!!! அருமை அருமை!!!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

மஹா பெரியவா சொன்ன தத்துவத்தை பாருங்கள்!!!

எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்”

“மொதல்ல சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம், பட்சணம், கடைசியா மோர்” அங்கே இருந்த பலர் சேர்ந்து சொல்லினர்.

“ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?” கேட்ட மகா பெரியவா, யாரும் பதில் சொல்லாததால்
தானே அதற்கு விடை சொல்ல ஆரம்பிச்சார்.

“மொதல்ல குழம்பு. இதுல, ‘தான்’ இருக்கு.( தான்” என்பது காய் கறி வகைகள்) பொறந்து வெவரம் தெரிஞ்சதுமே தான்கற அகங்காரம் மனசுல வந்துடறது. அதனால் நாம குழம்பிப் போயிடறோம். அந்தத் தானை கொஞ்சமா தீர்த்துட்டு, அடுத்தகட்டத்துக்குப் போறோம். அப்போ தான் இல்லாததால் ஒரு தெளிவு வந்துடறது. அதாவது ரசமான மன நிலை. அதான் ரசம்.

‘தான்’ இல்லாம தெளிவா இருக்கற மனசுல ரசமான எண்ணம் வருது. அது வந்ததும் எல்லாமே இனிப்பா பாயசமாகவும், பட்சணமாகவும் இருக்கு. கடைசியா மோர். பால்லேர்ந்து தயிர் கிடைக்கறது. அதுலேர்ந்து வெண்ணெய் எடுக்கறா. அதைக் காய்ச்சி நெய் வர்றது. இதெல்லாம் எடுத்தப்புறம் மிஞ்சி இருக்கிறது மோர்.

அதாவது மோர்லேர்ந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. அதாவது மோருக்கு அடுத்த பிறவி இல்லை. நாமளும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்ரவமும் பண்ணாம எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடைசில பரமாத்மாவோட கலந்துட்டா… அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது ‘நோ மோர்!”

information collected by panchadcharan swaminathasarma.

Image may contain: 1 person, beard and outdoor
மஹா பெரியவா சொன்ன தத்துவத்தை பாருங்கள்!!! அருமை அருமை!!!
Scroll to top