வரலட்சுமி விரதம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!

வரலட்சுமி விரதம்:

நண்பர்களே , பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பின்பற்றக் கூடிய விரதம்தான் வரலட்சுமி விரதம். வாழ்க்கையின் சுபீட்ஷம் வேண்டி யாரும் வணங்க முடியும்.

பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை இது. நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லாவகையான நலன்களையும் தரக்கூடியது; வரமாக வாரி வழங்கக்கூடியது. இந்த வேண்டுதல்களை ஆண்களும் வேண்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.

வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும். திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் இந்த வரலட்சுமி விரதம். விரத தினத்தன்று கீழ்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கலாம்.

”’பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
வக்ஷஸ்தலஸ்த்திதே
வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
சதேஹிமே”’

பொருள்:- அனைத்து பாக்கியங்களையும் அருளும் பாக்ய லக்ஷ்மியே, நமஸ்காரம். மாங்கல்ய பலனை உறுதிப்படுத்துபவளே, நமஸ்காரம். எங்களுக்கு எல்லா நலன்களையும் பாக்கியங்களையும் தந்தருளி, எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் வரலக்ஷ்மித் தாயே, நமஸ்காரம். திருமாலின் திருமார்பில் எழுந்தருளியுள்ள தேவியே, எங்களுக்கு அனைத்து வரங்களையும் தந்தருள்வாய் அம்மா.

Information collected by panchadcharan swaminathasarma.

 

Image may contain: 1 person
வரலட்சுமி விரதம்.
Scroll to top