காரைநகர் சிவன் கோவில் – இலங்கை

Pictureகாரைநகர் சிவன் கோவில் – இலங்கை

தலவரலாறு. 
இலங்கைக்கு வடக்கே சிரசுபோன்று இருப்பது யாழ்ப்பாணக் குடாநாடு. இதற்கு மேற்குத்திசையில் ஏழு பெருந்தீவுகள் அமைத்துள்ளன.மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைதீவு.இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். ஆதியில் இந்தியாவின் காரைக்கால் என்ற ஊரில் இருந்து குடியேறியவர்களை கொண்டமையால் காரைத்தீவு என்றும், இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் இரண்டு கூறப்படுகின்றது.காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக்கடலாலூம் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக்கடலாலும் சூழப்பட்டுள்ளது.

இவ்வூரோடு இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைத்தீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைத்தீவும் ஆக மூன்று காரைத்தீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்தி போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டு இருந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869ம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலை கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும்.இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் அரசின் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர்.

இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணைக்களி என்னம் திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா பீச் என்று அழைக்கப்படும் சுவாமி தீர்த்தம் ஆடும் தீர்த்தக்கரைக் கடலும், வடக்கே துர்வாகிரி (தூம்பில்) கடல்முனையும் உள்ளது.

சிவன் கோவில் ஸ்தாபிதம்
அம்பலவி முருகர் இயற்கையாகவே ஒரு சிவபக்தர். சிதம்பரயாத்திரை அடிக்கடி சென்று வழிபட்டு சிறந்த சிவன் நேயராகவும் திகழ்ந்தார். இவருக்கு சிவாலயம் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு ஒரு சிவன் கோவிலைக் கட்டுவித்தார். அதற்குரிய சிவலிங்கம் பெறுவது எங்ஙனம் என்று சிந்தனையில் மூழ்கி இருக்கும் போது இறைவன் கனவில் தோன்றி சிதம்பரத்தில் உள்ள சிற்பாச்சாரி ஒருவரிடம் பதினாறு சிவலிங்கங்கள் உண்டென்றும் தம்மால் அங்கு அடையாளம் காண்பிக்கப்படும் சிவலிங்கத்தினை பெற்று வரும்படியும் கூறினார். இறைவன் திருவருளை வியந்த முருகர் சிதம்பரம் சென்று சிற்பாச்சாரியாரை அணுகி தாம் வந்த நோக்கத்தை தெரிவித்தார். அவரிடம் இருந்து 16 லிங்கங்களையும் பேரானந்தத்துடன் முருகர் நோக்கினார். அப்பொழுது ஏழாவது லிங்கத்தில் இருந்து வெண்முகில் போன்ற ஆவி எழுவதைக் கண்டு இறைவனது அருட்குறிப்பை உணர்ந்து அதன் விலையைக் கேட்டபோது பதினாறு வராகன் என்றார் சிற்பி, அவ்வளவு பணம் தம்மிடம் இல்லையே என்று வருந்தி அவ்விடத்தை விட்டகன்றார்.

அன்றிரவு சிற்பியின் கனவில் இறைவன் தோன்றி பத்து வராகனுக்கு கொடுக்கும்படி ஆணையிட்டார். மறுநாள் சிற்பி முருகரிடம் பத்து வராகனைப் பெற்றுக் கொண்டு அவ்லிங்கத்தை ஒப்படைத்தார். முருகர் சிதம்பரத்திலே சில நாள் தங்கி விநாயகர், சுப்பிரமணியர், சண்டேசுவரர், நந்தி, பலிபீடம் முதலான திருவுருவங்களை செதுக்குவித்துக் கொண்டு திண்ணபுரம் திரும்பி புதிய சிவலிங்கப்பெருமானினதும் அம்பிகையினதும் வனப்பையும் அருமாட்சியினையும் கண்ட குருமாரும் பெரியோர்களும் அன்று முதல் கோயிலை ஈழத்துச் சிதம்பரம் என்றும் சுவாமியை சுந்தரேசுவரர் என்றும் அம்பிகையைச் சௌந்தராம்பிகை என்றும் திருநாமம் இட்டு அழைக்கலாயினர்.

காரைநகர் சிவன் கோவில் – இலங்கை
Scroll to top