தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்றோ சஞ்சலப் பட வேண்டாமே!
எம்மை இந்த உலக்கிற்கு அறிமுகப் படுத்திய தாய் தந்தையரை கௌரவிப்போம் !! அவர்கள் மறைந்த பின் அவர்களை நினைவில் கொண்டால் ஏன் நாம் சஞ்சலப் பட வேண்டும்???
என் உயிர் பிரிந்த நாளில் என் நினைவோடு அன்னதானம் செய். நீயும் உனது குடும்பத்தாரும் செழிப்படைவீர்கள். அதை கடமையாகக் கருதி செயல்படவேண்டும்’ என அறிவுறுத்தி மறைந்தார் தந்தை. அவர், தனக்காக அன்னதானம் செய்யச் சொல்லவில்லை. தனது வம்சாவளி செழிப்புற வேண்டும் என்பதற்காக அப்படி பரிந்துரைத்தார். ஆனால், மகனோ அனைத்தையும் மறந்து செயல் பட்டுக் கொண்டிருக்கிறான். இப்படித்தான், நம் நன்மைக்காக முன்னோர் சொல்லிச் சென்ற விஷயங்களைக் கடைப்பிடிக்காமல் வாழ்கிறோம்!
தந்தையின் ஜீவாணுக்களில் உருவானவன் தனயன். அது வழி அவனது தொடர்பு, தந்தைக்கு இருக்கும். அவர், சூட்சும வடிவில் தனயனின் நினைவில் இருப்பார். ஆனால், தந்தையின் நினைவு நாளில் அவரை நினைத்துச் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள் இன்றைய தனயன்கள்!
பிறகு, குடும்பத்திலோ வாழ்விலோ செயல் பாடுகள் தடைப்படும்போது, சில இடையூறுகள் விளையும்போது, முன்னோருக்கான பணிவிடை யைச் செய்யாமல் விட்டதுதான் இதற்கெல்லாம் காரணமோ என்று மனது பரிதவிக்கும். அவனது மனமே குற்றத்தைச் சுட்டிக்காட்டும். மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்தும்.
மகன் மீதுள்ள அன்பினால் அவனை நெறிப்படுத்தாமல் விட்டுவிட்டால், அந்தப் பரம்பரையே துயரத்தைச் சந்திக்க நேரும். அவனது ஜீவாணுக்களில் உருப்பெறும் வாரிசுகளிடம், முன்னோரை வழிபட வேண்டும் என்ற எண்ணமே தோன்றாமல் போகக்கூடும். தனது பரம்பரையை ஒட்டுமொத்தமாக அழிவில் இருந்து காக்க, மகனைத் தண்டிப்பதற்குத் தயங்கமாட்டார்கள் முன்னோர்கள். ஆகையால் பித்ருக்களின் சாபம் என்று எண்ணாமல், அதை அவர்களது அருளாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தர்மசாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா? ‘தந்தைக்கு இழைத்த துரோகம், தனயனிடமும் அவனுடைய புதல்வனிடத்திலும், வம்சத்திலும் வெளிப்படும்’ (ததன்வயேபிச) என்கிறது.
நண்பர்களே , முன்னோர்கள் நோக்கிய பார்வையில் எங்கள் கடமைகளை செய்வோம். அப்படி தவறாமல் செய்யும் பட்சத்தில் சாபங்கள் தோஷங்கள் என்று பரிதவிக்க வேண்டிய அவசியம் இல்லை. கடமைகளை செய்து முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவோம்!!!
ன்றி: ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்,
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மிக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
கடமைகளை செய்தால் பித்ரு சாபம் என்றோ பிதுர் தோஷம் என்று சஞ்சலப் பட வேண்டாமே!