விநாயகப் பெருமானின் திருவுருவ விளக்கம்!
தெரிந்து கொள்வோம் நண்பர்களே! முழுமுதல் கடவுள், விக்கினங்களைத் தீர்ப்பவர் , அந்தப் பெருமானின் திருவுருவ விளக்கங்களை அறிவோம்!!! திருவுருவ விளக்கம் : திருவடி : ஆன்மாவைப் பொருந்தி நின்று மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. பெருவயிறு : ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது. ஐந்துகரங்கள் : பிள்ளையாரின் […]