மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 1.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 1.
வாழ்வாங்கு வாழ்ந்த மனிதனுக்கு செய்ய வேண்டிய இறுதிக்கடன்கள் பற்றி ஓரளவு என்றாலும் அறிந்து வைத்திருப்போம் நண்பர்களே!
இந்தப் பகிர்வு மூன்று பிரிவுகளாக இங்கு தரப்படுகிறது!
அந்த்யேஷ்டி’ _ அதாவது ஈமச் சடங்கு என்பது ஒரு சாராருக்கு மட்டுமல்ல; இந்த மண்ணின் மைந்தர்கள் அத்தனை பேருக்கும் இந்த சம்ஸ்காரம் உண்டு. காலப்போக்கில் இது சில பிரிவினரிடம் எரியூட்டல், பால் வார்த்தல், அஸ்தி கலசம் கரைத்தல் என்ற மூன்றோடு சுருங்கிவிட்டதை நம் துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். மனித இனத்தின் மகிழ்ச்சியில் பண்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை இழந்தால், நமது தனித்தன்மை மறைந்து விடும். வருங்கால வாரிசுகளுக்குப் பண்பாடு தெரியாமல் போகும்.
பத்து மாதங்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை முழு வளர்ச்சி அடைவது போல, இறந்தவருக்குக் கொடுக்கும் தண்ணீராலும், இரண்டு வேளை உணவாலும் பத்து நாட்க ளில் அவரது சூட்சும உருவம் முற்றிலும் வளர்ந்துவிடும். அப்போது அவருக்கு ஏற்படும் பெரும் பசியைத் தணிக்க அளவில்லா உணவை ஆதரவோடும் பக்தியோடும் அளிக்க வேண்டும். அதற்கு ‘ப்ரபூதபலி’ என்று பெயர். ‘ப்ரபூத’ என்றால் நிறைவு. ‘பலி’ என் றால் உணவு. உணவில் திருப்தி அடைந்த அவரை வணங்கி, அவரது ஆசி பெற்று, கற்களில் இருந்தும் எடுத்து வழியனுப்பிவிட வேண்டும். அவரது பிரிவால் கலக்கமுற்ற சுற்றத்தாரை மகிழ்விக்க ‘ஆனந்த ஹோமம்’ என்ற வேள்வி செய்ய வேண்டும்.
பதினோராவது நாள் அவரைப் புண்ணிய லோகத்துக்கு அனுப்பவேண்டும். அவரை அங்கு சேர்ப்பதற்கு கன்றுக்குட்டியை உலகுக்கு அளிக்கவேண்டும். அதற்கு ‘விரு ஷோத்ஸர்ஜனம்’ என்று பெயர். ‘விருஷம்’ என்றால் காளை மாடு. ‘உத்ஸர்ஜனம்’ என் றால், பிறருக்காக அளித்தல் என்று பொருள். விருஷபம்- தர்மத்தின் வடிவம் என்று சாஸ்திரம் கூறும் (தர்மஸ்த்வம் விருஷரூபேண…). அது தியாகத்தின் மறு உருவம். பிறருக்காகவே தன் வாழ்நாளைப் பயன்படுத்துகிறது. ‘இறந்த வரின் நன்மைக்காகவும், கடமையை ஆற்றும் புதல்வனுக்காகவும் காளை மாட்டை உலகுக்கு அளிப்பது சிறப்பு’ என்று தர்ம சாஸ்திரம் வலியுறுத்தும்.
அக்னியை வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, இறந்தவரை அதில் இருக்கச் செய்து, அவருக்குப் பணிவிடை செய்து உணவளிக்க வேண்டும். அதற்கு ‘ஏகாஹோமம்’ என்று பெயர். ‘ஏகா’ என்றால், ‘இறந்த ஒருவரை நினைத்து’ என்று பொருள். ஹோமம் என்றால் வேள்வி. அன்னத்தை நாம் உண்ணும் அளவு உருட்டி, முப்பத்து இரண்டு கவளம் அளவு இறந்தவ ருக்காக அக்னியிடம் அளிக்க வேண்டும். இறந்தவர், அக்னி வாயிலாக அதைப் பெற்றுத் திருப்தி அடைகிறார் என்று வேதம் கூறுகிறது. ‘இறந்தவருக்காகக் கொடுக்கும் உணவை வாங்கி அவரிடம் ஒப்படைக்கிறார் என்பதால், அக்னிக்கு கவ்யவாஹனன் எனும் பட்டப் பெயர் உண்டு’ என்று வேதம் புகழ்கிறது.
அறத்தில் ஆர்வம் கொண்ட ஒரு பெரியவரை அழைத்து அவரில் இறந்தவரை மந்திரத்தால் இருக்கச் செய்து, அவருக்குப் பணிவிடை செய்து அன்னம் அளித்துப் பெருமைப் படுத்த வேண்டும். இதை ‘ஏகோத்தி வட்டம்’ என்பார்கள். ‘ஏக’ என்றால் ஒருவர். யார் அந்த ஒருவர்? அவர்தான் இறந்த தந்தை. அவரை நினைத்து உணவளிப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
பகுதி 2 பின்னர் தொடரும்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

மனித வாழ்வின் இறுதிக்கால கடன்கள்!!! பகுதி 1.
Scroll to top