தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
பொன்னும் பொருளும் தரும் பைரவர் ( வயிரவர்) வழிபாடு!!!
பைரவர், சிவபெருமானின் மற்றோர் அவதாரம். அனைத்துக் கோயில்களிலும் பைரவருக்குத் தனி சிலைகள் உள்ளன. பைரவர் முற்றும் துறந்தவர் என்பதால், கோயில்களில் நிர்வாணமாகக் காட்சி தருகிறார்.
இவரது வாகனம் _ நாய். பைரவ வழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. வட நாட்டில் பல இடங்களில் பைரவருக்கு தனிக் கோயில்கள் உள்ளன. காசியில் இவர் காவல் தெய்வமாக- கால பைரவராகத் தனிக் கோயிலில் வீற்றிருக்கிறார். அதனால் காசியில் எவருக்கும் எம பயம் கிடையாது. காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவரை தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தியாகும். அங்கு வழங்கப்படும் காசிக் கயிறைக் கட்டிக் கொண்டால் பாவங்களும் எம பயமும் நீங்குகின்றன என்பது ஐதீகம்.
கிராமங்களில் முனீஸ்வரர் என்ற பெயரில் காவல் தெய்வமாக விளங்குகிறார் பைரவர். இவர் ‘க்ஷேத்ர பாலகர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்ததே பைரவர் அவதாரம். பிரம்மாவின் தலையை பைரவர் கிள்ளிய ஸ்தலம்தான் திருக்கண்டியூர்.
கோயிலில் தரிசனம் முடிந்ததும் சண்டிகேஸ்வரரை வணங்குவது போல் தவறாமல் பைரவரையும் வணங்க வேண்டும். பைரவரை வணங்கினால் சனீஸ்வரரின் பாதிப்பு குறையும். செல்வம் பெருகும். இழந்த பொருள்கள் கிடைக்கும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பைரவருக்குப் பல வடிவங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் _ சொர்ணா கர்ஷண பைரவர். இவர் சொர்ண பீடத்தில் அமர்ந்து அழகிய திருமேனியுடன் இடக் கையில் சூலம் ஏந்தி, மடியில் பைரவியை அணைத்தவாறு வலக் கையில் தங்கக் குடமேந்தி காட்சி தருவார்.
கால பைரவரை தேய்பிறை அஷ்டமி யிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது மிகச் சிறந்தது.
வாழ்க்கையில் எம பயம் நீங்க, நீண்ட ஆயுள் பெற, துன்பங்கள் நீங்க_ கால பைரவரை தரிசனம் செய்து ஸ்ரீசங்கராச்சார்யார் அருளிய கால பைரவாஷ்டகம் படிக்கலாம்.
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறவும் குறைவிலா செல்வங்கள் கிடைக்கவும் வளமாக வாழவும் ஸ்ரீதுர்க்கைச் சித்தர் அருளிய இலுப்பைக்குடி சொர்ண பைரவ அஷ்டகத்தை தினமும் ஆசாரத்துடன் படித்து, தரிசித்து வரலாம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
பொன்னும் பொருளும் தரும் பைரவர் ( வயிரவர்) வழிபாடு!!!

