தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தம்பதிகளாக , குடும்பத்துடன் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து வழிபடுவோம்!!!
ஆன்மிகத் தலங்களுக்குச் செல்லும் போது, முடிந்த அளவு தம்பதி சமேதராக சென்று சங்கல்பம் செய்து வழிபடுவதுதான் சிறந்தது!
தாம்பத்தியத்தில் இருவரின் சேர்க்கையில் இன்பம் காண்கிறோம். இருவரின் சேர்க்கையிலேயே வாரிசை உருவாக்குகிறோம். இன்ப-துன்பங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். அப்படியிருக்க, இருவரும் சேர்ந்து சங்கல்பம் செய்வதே சிறப்பு.
எதிர்பாராத சூழலில் கணவன் வர இயலாது போனாலோ, தெய்வாதீனமாக அவர் வருவது தடைப்பட்டாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு வழிபாட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டிருந்தாலோ… கணவனுக்கும் சேர்த்து மனைவியானவள் சங்கல்பம் செய்துகொள்ளலாம். தெரிந்தே கணவரை ஒதுக்கி வைத்து, அவர் வரமுடியாத சூழலை உருவாக்கி, அதன் பிறகு தனியாக சங்கல்பம் செய்வது கூடாது. அவ்வாறு செய்தாலும் பலன் அளிக்காது.
விவாகங்கள், பிறந்ததின விழாக்கள், விடுமுறை தின கொண்டாட்டங்கள் என்று எல்லா விடயங்களுக்கு தம்பதிகளாக செல்லும் பலர் ஆலயம், வழிபாடு என்றவுடன் நேரம் கிடைக்கவில்லை, இன்றைக்கு லீவு எடுக்க முடியவில்லை , கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டும் என்று பல இன்னோரன்ன காரணங்களை சொல்வதை அவதானிக்கலாம் நண்பர்களே!!!
உறவைத் துண்டித்துக் கொண்டு தனியே வாழும் நிலையில், சங்கல்பம் செய்யலாம். சேர்ந்து இன்பத்தைச் சுவைக்க திருமணத்தில் ஒன்றினார்கள். அதன் பிறகு, தனியாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது சரியில்லை. அதற்கு ஒன்றாமலேயே இருந்திருக்கலாம். முடிந்த வரையிலும் இருவரும் சேர்ந்தே செயல்பட முயற்சி செய்யுங்கள். அது, இருவருக்கும் மட்டுமல்ல அவர்கள் சார்ந்து இருக்கும் குடும்பத்தினர்க்கே நல்லது. பலன்தரவல்லது!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

தம்பதிகளாக , குடும்பத்துடன் ஆலயம் சென்று சங்கல்பம் செய்து வழிபடுவோம்!!!