சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம் எது?
`சிவ நிக்வஸிதம் வேதா: வாக் ரூபாஸ்ச சிவாகமா:’ என்று சிவபெருமானுடைய மூச்சுக்காற்று வேதமாகவும் அவருடைய வார்த்தைகளே சிவாகமங்களாகவும் உள்ளன என்கின்றனர்.
சிவாகமங்களில் 28 மூல ஆகமங்களும் 207 உப ஆகமங்களும் உள்ளன.
1) காமிகம் 2) யோகஜம் 3) சிந்த்யம் 4) காரணம் 5) அஜிதம் 6) தீப்தம் 7) ஆக்ஷமம் 😎 சகஸ்ரம் 9) அம்சுமான் 10) சுப்ரபேதம் 11) விஜயம் 12) நிக்வாஸம் 13) ஸ்வாயம்புவம் 14) அனலம் 15) வீரம் 16) ரெளரவம் 17) மகுடம் 18) விமலம் 19) சந்த்ரஞானம் 20) பிம்பம் 21) ப்ரோத்கீதம் 22) லலிதம் 23) சித்தம் 24) சந்தானம் 25) சர்வோக்தம் 26) பாரமேச்வரம் 27) கிரணம் 28) வாதுளம் என்பவை மூல ஆகமங்கள்.
ஒவ்வோர் ஆலயமும் ஓர் ஆகமத்தின்படியே பூஜை முறைகள் அமைத்திருக்கும்.
முதல் 10 ஆகமங்கள் சிவபேதம் எனவும் ஏனைய 18 ருத்ரபேதம் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை முதலில் சிவபெருமனார் அம்பிகைக்கு உபதேசித்து அவர் மூலம் அறுபத்து அறுவருக்கு அளித்து பிற்பாடு நமக்கு அளிக்கப்பட்டன.
அனைத்து ஆகமங்களிலும் சர்யாபாதம் – நாம் தினசரி செய்ய வேண்டிய கடமைகள், கிரியா பாதம் – நாம் செய்ய வேண்டிய பூஜை முறைகள், யோக பாதம் – பிராணாயாமம், அந்தர்யாகம் முதலிய அகவழிபாடு யோகக் கலைகளையும், ஞான பாதம் எனும் பகுதியில் பதி – சிவபெருமானார், பசு – ஜீவாத்மாக்கள், பாசம் – உலகம் என்பவை பற்றிய விளக்கங்களும் மிக விரிவாகவும் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆகமங்களில் உள்ள சுலோகங்களின் எண்ணிக்கைகளும் சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்து தோன்றியவை எவை என்பன பற்றியும் கூறப்பட்டுள்ளன.
பூஜை முறைகள், சிற்பக்கலைகள், நகர அமைப்பு, நமக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ள தொடர்பு என்று வேதங்களில் மறைமுகமாகக் கூறப்பட்ட உண்மைகளை நமக்கு ஆகமங்கள் தெளிவுபடுத்தி உணரச் செய்கின்றன.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மிக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
May be a graphic of text
சிவாகமங்கள் என்னென்ன, அவற்றுள் திருக்கோயில் வழிபாடுகள் மற்றும் நியதிகள் குறித்து வழிகாட்டும் ஆகமம்
Scroll to top