தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்!
தரிசனம் என்பது இறைவனை தரிசிப்பது மட்டும்தானே… அப்படியிருக்க கோபுரம், துவஜ ஸ்தம்பம், மலை போன்றவற்றை தரிசிப்பது எப்படி தரிசனமாகும்? என்பது பலரின் சிந்தனையாக இருப்பதை அவதானிக்க முடிகிறது!
‘”த்ருச்’” எனில் பார்த்தல், தரிசனம் எனில் இறைவனின் சக்தி உறைந்திருக்கும் இடங்களில் எல்லாம் அவரை தரிசித்து, இறை அனுபூதியைப் பெற்று நம்முடைய உண்மை நிலையினை அறிதல்.
சிவாகமங்கள் சிவலிங்கத் திருமேனியை மட்டுமல் லாது, கொடிமரம் பலிபீடம் போன்றவற்றையும் சூட்சும லிங்கம், ஸ்தூல லிங்கம், பத்ர லிங்கம் என்று பெயர்களிட்டு விளக்கியுள்ளது. ‘”விகதம் மானம் விமானம்”’ என்பதற்கேற்ப, கோயிலின் உள்ளே இருக்கக்கூடிய இறை ஆற்றல் விமானங்களின் மூலம் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்றடையும். ஆகவே விமான தரிசனம் விசேஷமானது. அதேபோல், ராஜகோபுரம் இறைவனின் பாதகமலங்களாக விளங்குவதால், கோபுர தரிசனமும் உயர்வானது.
“கோ” என்றால் இறைவன். “புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள்.
கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு.
“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந் திருவீதியை வணங்கி………..”
கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து
வணங்க வேண்டும் என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
“கோ” என்றால் இறைவன். “புரம்” என்றால் “இருப்பிடம்”. இறைவனின் இருப்பிடமே கோபுரம். அதனால் தான் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு கோபுரத்தை உயரமாகக் கட்டியிருக்கிறார்கள்
ராஜகோபுரமே மற்ற கோபுரங்களை விட உயரமாக இருக்கும். நெடுந்தொலைவிலிருந்து பார்த்தாலே இது கம்பீரமாகத் தெரியும் . இதை ஒரு லிங்கமாக எண்ணி வணங்குவதும் உண்டு. இதனை ஸ்தூல லிங்கம் என்று சொல்வது ஐதீகம்.
கோபுரம் இருக்கும் இடத்திற்கும், அது நம் பார்வையில் படும் இடத்திற்கும் இடைப்பட்ட இடத்தை பூலோக கைலாசம் என்றும் அழைக்கப்படும்.
கோபுரத்தை கடவுளின் திருவடி என்பர். கருவறைக்கு உள்ள புனிதம் இதற்கும் உண்டு.
“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து
நெடுந் திருவீதியை வணங்கி………..”
கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து
வணங்க வேண்டும் என்று பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
“கோலக் கோபுரக் கோகரணஞ்
சூழா கால்களாற் பயனென்” என அப்பர் சுவாமிகள்
கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறியுள்ளார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்”
என்று கோபுர பெருமையை சொல்கிறார் திருமூலர்…
கடல், நதிகள், மரங்கள், மலைகள் போன்று பல முக்கியமான இடங்களை நம் ஆகமங்கள் குறிப்பிட்டு, அங்கெல்லாம் இறையருள் சக்தியைப் பெறுவதற்கு வழிகாட்டி இருக்கின்றன. இது நம் மதத்தின் தனித்துவம்.
இன்றும் பல பக்தர்கள், மலை அடிவாரங்களிலும் வணங்கியும் ,மலையுருவில் இருக்கும் இறைவனை வலம்வந்து வழிபட்டு வருவது அனுபவ உண்மை. மின்சாரம் ஒன்றாக இருந்தாலும் அதன் ஆற்றலை நாம் பல வகைகளில் பெறுவதைப்போல் இறையருளையும் பல நிலை களில் பல வடிவங்களில் பெறலாம்.!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, ஆன்மீக மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
ஆலய தரிசனம்/ கோபுர தரிசனம்!