தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்!
இன்றும் ஜாதகத்தில் செவ்வாயை கண்ட உடன் தலை தெறிக்க ஒடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆண் பெண் ஜாதகங்களைஒப்பிடும் போது செவ்வாய் எப்படி இருக்கிறது , எதனுடன் சேர்ந்திருக்கிறது ,இது சரிவருமா சரிவராதா என்று பார்க்க முன்பே இது செவ்வாய்க் குற்றம் என்று தள்ளி வைக்கும் சோதிடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!!
நவக்கிரகங்களில் தனியிடம் பெற்றவன் செவ்வாய். இவனுக்கு ‘குஜன்’ என்றும் பெயர் உண்டு. ‘கு’ என்றால் பூமி; ‘ஜன்’ என்றால் பிறந்தவன் எனப் பொருள்; பூமி புத்திரன் என்பார்கள்.
படைப்புக்கு வெப்பத்தின் துணை அவசியம். பிரம்மன், ரஜோகுண சேர்க்கையில் படைப்பை நிகழ்த்துகிறார் என்கிறது புராணம். இந்த ரஜோகுணத்துடன் இணைந்தவன் செவ்வாய். ‘அக்னிர்மூர்த்தா’ என்ற மந்திரத்தை அவனை அழைப்பதற்காக பயன்படுத்தச் சொல்கிறது வேதம்.
‘அங்கார’ என்றால் நெருப்புத் தணல். வேதம், நெருப்புத் தணலை அங்காரம் என்கிறது. அதிக வெப்பம் தணலில் இருக்கும்; ஜ்வாலையில் இருக்காது. அந்த வெப்பத்தைச் சுட்டிக் காட்டி, செவ்வாயை அங்காரகன் என்றார்கள்.
சுறுசுறுப்பு, செயல்பாடு, சிந்தனையோட்டம், தன்மானம், வீரம், தைரியம், கண்டிப்பு, ஆர்வம், பிடிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய அனைத்தும் செவ்வாயின் சேர்க்கையில் முழுமை பெற்று விளங்கும்.
அத்யுச்சம், உச்சம், மூலத்ரிகோணம், ஸ்வக்ஷேத்ரம், போன்ற பலம் பெற்ற செவ்வாய், வாழ்க்கையில் தடையில்லா மகிழ்ச்சியை அளிப்பார் என்பதை ஜோதிடம் மிகத் தெளிவாக சொல்கிறது நண்பர்களே!!!
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர் , www.modernhinduculture.com
செவ்வாய் கிரகத்தின் மகிமையை அறிவோம்!