தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
நவராத்திரி பூஜை வழிபாடுகள் சமயத்தில் பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம்.
ஆகமங்களில் பாலிகை பூஜை மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது. அனைத்து யாகங்களிலும் ரோகிணி, கிருத்திகாவுடன் சந்திரனையும், அவரைச் சுற்றிலும் பாலிகைகளில் 12 சூரியரையும் வளர்ச்சியின் அடையாளமாக வழிபடுவது மரபு.
திருமணம் முதல் ஆலய வழிபாடுகள், உபநயனம் உட்பட்ட அனைத்து சுபகாரியங்களிலும் வளர்ச்சியின் குறியீடாக முளைப்பாலிகை வைத்து அவரவர் மரபுப்படி பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.
நாம் நன்றாக இருக்கவேண்டும்; ஆரம்பித்த காரியம் நன்றாக முடியவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம். காரியம் நல்லபடியே நிறைவுபெற வேண்டும் என்று இறைவனை வழிபட்டு , சுமங்கலிகள் அல்லது ஆலயத்தில் குருமார் என்று அந்த அந்த இடத்துக்கு ஏற்றவாறு பாலிகை போட்டு பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.
செடிகளாக வளர்ப்பது வேறு; பூஜையின் பொருட்டு பாலிகைகளில் வளர்ப்பது வேறு. செடிகளாக வளர்ப்பதால் சூழலுக்கு அழகு சேர்க்கும்; சுற்றுப்புறம் சிறப்படையும். அதேநேரம் பூஜைகளில் பாலிகை ஒரு குறிக்கோளுடன் இடம்பெறுகிறது.
மங்கல நிகழ்வுகளில் மட்டுமே பாலிகை தான்யங்களை முளைக்கச் செய்வது மரபு.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com
பாலிகை பூஜை பற்றி அறிந்து கொள்வோம்.