ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்!
கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது. சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார். ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள். இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது.
நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக் கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால்தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
கோவில் திருவிழாவின் முதல் நாள் கொடியேற்றுவது எதற்காக என்றால்,திருவிழாவிற்கு வரும் பக்தர்களை உயர்நிலை அடைய செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் புரிய போகிறார் என்பதாகும்.
திருவிழா நாட்களில் அந்த ஊர் முழுவதையும் தன் கட்டுக்குள் இறைவன் வைத்திருப்பதை
உணர்த்தும் விதமாக கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
இறைவனை அடைந்தால் அழிவற்ற,ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருக்கலாம் என்று நினைத்து,கொடி மரத்தை வணங்க வேண்டும்.
தொகுப்பு: சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின் இதழ் ஆசிரியர் www.modernhinduculture.com
May be an image of text
ஆலயத்தில் உள்ள கொடிமரம் பற்றிய ஓர் குறிப்பைப் பார்ப்போம்!
Scroll to top