திருமண வாழ்த்து!
இன்று கனடா மார்க்கம் கொன்வென்ஷன் நிலைய திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக விமரிசையாக நடை பெற்ற விவாகம்!!!
ஷடமர்ஷன கோத்திரம்(England) சிவஸ்ரீ பால. வசந்தன் குருக்கள் (பா. சர்வேஸ்வரக்குருக்கள்) ஸ்ரீமதி ஸ்ரீவித்யா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரி செளபாக்யவதி லலனா அவர்களுக்கும் காசிப கோத்திரம் (Canada) சிவஸ்ரீ ஸ்ரீனி. குகன் குருக்கள் (ஸ்ரீ. குகனேஸ்வரக் குருக்கள்) ஸ்ரீமதி சத்யலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் சிரஞ்சீவி தினேஷ் சர்மா அவர்களுக்கும் இன்று 05/05/2023 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக திருமணம் நடைபெற்றது!
புதுமணத் தம்பதிகள் இல்லறத்தில் இணைந்து ,சகல ஐஸ்வர்யங்களுடனும் , சகல செல்வங்களுடனும் மிக சிறப்பாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகாதேவி சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமானை வேண்டி தம்பதிகளை வாழ்த்துகிறோம்.
வாழ்க மணமக்கள்!!!
Modern Hindu Culture நிறுவன தலைமையகம், சுன்னாகம்.
சிவஸ்ரீ நா. சோமஸ்கந்தக்குருக்கள்,
சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள்.
திருமண வாழ்த்து! தினேஷ் & லலனா!!!