சனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.

தொன்று தொட்டு வரும் வழிபாட்டு முறைகளையோ, அல்லது பக்தர்களின் நம்பிக்கைகளையோ நாம் ஒரு நாளும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை! அது அவர்களின் நம்பிக்கை, அவர்களது வழக்கம். ஆனால் நாம் அறிந்த ,படித்த, ஆன்மிக நூல்களில் உள்ள விடயங்களை தொகுத்து இங்கு வழங்கி வருகிறோம். அந்த அடிப்படையில் ,இந்த சனி வழிபாடு செய்யும் தருணத்தில் இந்த விடயங்களையும் குறிப்பிடலாம் என்று கருதுகிறோம்.
அவரது வாகனம் ஆகிய காகம் கருப்பு நிறத்தை உடையது, தானியம் ஆகிய எள்ளு கருப்பு நிறத்தை உடையது என்ற இரு காரணங்களைத் தவிர சனிக்கும், கருப்பு நிறத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சனீஸ்வரன் என்று நாம் குறிப்பிடுவதை ‘சனைஷ்சரன்’ என்று மாற்றியும் நாம் சொல்லி வணங்கலாம்! . சனைஷ்சரன் என்றால் மெதுவாக நகருபவன் என்று பொருள்.
சனைஷ்சரனின் நிறம் நீல வர்ணம் என்றுதான் வேதம் குறிப்பிடுகிறது. கருநீல நிறத்தை உடைய சனி கிரஹம் தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போது கருமையாக தெரிகிறது. அதனால் கருநீல நிறமானது திரிந்து கருப்பு நிறமாக மாறிவிட்டது.
சனைஷ்சரனுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றுவதை விட கருநீல வஸ்திரம் சாற்றுவதே சாலச் சிறந்தது என்று வேதம் நமக்கு வழிகாட்டுகிறது. நீல நிற மலர்களைக் கொண்டு சனியை அர்ச்சிப்பதும் நன்மை தரும்.
நண்பர்களே, சாஸ்திர நூல்கள், வேதங்கள் கூறும் தொகுப்புகளை வழமை போல நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நாமும் எண்ணுகிறோம். அனைவர்க்கும் சனி பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுகிறோம்.
தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ( E Magazine Editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture . Org,
www.modernhinduculture.com
சனி பகவான் பற்றிய சிறு குறிப்பு.
Scroll to top