சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?

சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?
சிவன் சொத்தில்தான் நாம் கை வைக்கப் படாது, மற்ற மற்ற தெய்வ சொத்துக்களை நாம் எப்படியும் கையாடலாம் என்று பொருள் கொள்ள வேண்டாம் நண்பர்களே!
இங்கே சிவம் என்று குறிப்பிடப்படுவது பரமேஸ்வரனை மாத்திரம் அல்ல. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் நிறைந்த இறை சக்தி என்று பொருள். விநாயகர், சுப்ரமணியர், பரமேஸ்வரன், துர்க்கை, விஷ்ணு, மஹாலக்ஷ்மி என அனைத்து தேவதைகளுக்கு உரிய அஷ்டோத்தர நாமாவளிகளில் ‘சிவாயை நமஹ’ என்ற நாமமும் இடம்பெற்றிருப்பதைக் காணமுடியும்.
ஆக சிவம் என்ற சொல் பரமேஸ்வரனை மட்டும் குறிப்பதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிவம் என்ற சொல்லுக்கு கடவுள் என்று அர்த்தம். ஆக எந்த சுவாமியின் ஆலய சொத்தாக இருந்தாலும் அதனை தனி மனிதன் தனக்கு என்று பயன்படுத்திக்கொள்ளும்போது அவனது பரம்பரை துன்பத்திற்கு உள்ளாகும் என்பதை உணர்த்தவே ‘சிவன் சொத்து குலநாசம்’ என்று சொல்லி வைத்தார்கள்.
இந்தப் பழமொழி சிவன் கோயில், பெருமாள் கோயில், முருகன் கோயில், பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில் என அனைத்து ஆலயங்களுக்கும் பொருந்தும். இறைவனின் திருப்பணிக்காக என்று ஒதுக்கி வைத்த பணத்தையும், பொருளையும் தனிப்பட்ட சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற எச்சரிக்கையாகவே அமைந்ததுதான் ‘சிவ சொத்து குலநாசம்!’ என்ற சொல் வடை.
prepared:
Panchadcharan Swaminathasarma
E Magazine Editor,
Modern Hindu Culture.
சிவன் சொத்து குலநாசம் என்று குறிப்பிடுவது ஏன்?
Scroll to top