MIH சர்வதேச நிறுவனத்தின் கண்ணீர் அஞ்சலி
அம்புலிமாமா சஞ்சிகையின் ஆஸ்தான ஓவியர் ஷங்கர். திரு.சங்கரன் மாமா அவர்களின் இழப்பு ஓவியர்களின் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.பாரம்பரிய ஓவிய முறைகளில் தனக்கென ஒரு தனியான பாணியை அமைத்துக் கொண்டவர்.
சிறுவயதில் அம்புலிமாமா பத்திரிகையை ஆவலுடன் அனைவரும் வாங்குவது Shankar அவர்களின் படங்களை பார்ப்பதற்கு தான்.
கதை முழுவதையும் அவரது ஓவியங்கள் பேசி விடும்.
பலர்அவரது ஓவியங்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு ஆரம்ப காலத்தில் வரைந்து பழகியவர்கள் தான்.
இன்றைய தலைமுறையிலும் சில நல்ல ஓவியர்களை உருவாக்கி இருக்கிறார்.
ஓவியர்.மணியம் செல்வன்(ம.செ) திரைப்பட நடிகர்& ஓவியர்.சிவக்குமார் போன்ற பலரும் கூட அவரை குருவாக ஏற்றுக் கொண்டவர்களே.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் பாதம் பணிந்து
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி
MIH சர்வதேச நிறுவனத்தின் தலைமையகம்.
ஓவியர் ஷங்கர் தமிழ்நாடு.