பூணூல்

ஒரு பிரம்மச்சாரி க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழையும்போது இரண்டாவது பூணூலை அணிகிறான். ‘க்ருஹஸ்தாச்ரம யோக்யதா சித்யர்த்தம் த்வீதிய யக்ஞோபவீத தாரணம் கரிஷ்யே’ என்று சொல்லி அணிந்து கொள்வார்கள். விவாஹம் ஆனவுடன் அவன் குடும்பஸ்தன் ஆகிவிடுகிறான். அவன் மனைவியை இழந்துவிடும் பட்சத்தில் அவனை பிரம்மச்சாரி என்று எவ்வாறு சொல்ல முடியும்? திருமணம் ஆகாத பெண்ணை செல்வி என்று அழைப்பார்கள்.

திருமணம் ஆனவுடன்  திருமதி என்று சொல்வார்கள். திருமணம் ஆன ஒரு பெண் தன் கணவனை இழக்க நேரிட்டால் அவரை மீண்டும் செல்வி என்று அழைப்பதில்லை. இது ஒரு வழிப்பாதை. பிரம்மச்சரியத்தில் இருந்து க்ருஹஸ்தாச்ரமத்திற்குள் நுழைந்த ஒருவன் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது.

வானப்ரஸ்தம் என்ற நிலைக்குள்தான் நுழைய இயலும். அதாவது, குடும்பத்தில் இருந்துகொண்டே ஆசாபாசங்களைத் துறந்து வாழும் நிலை. மூன்றாவது பூணூல் என்பது திருதிய வஸ்திரத்திற்கு மாற்றாக அணிந்து கொள்வது.  சந்யாசி, அனைத்தையும் துறந்தவர்.

சந்யாசிகள் பூணூல் அணிவதில்லை. க்ருஹஸ்தனாக மாறிய ஒருவனால் மீண்டும் பிரம்மச்சரியத்திற்குள் செல்ல இயலாது என்பதால் அவன் மனைவியை இழந்த போதிலும் இரண்டு அல்லது மூன்று முடி கொண்ட பூணூல்தான் அணிய வேண்டும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

See the source image

 

K.B ஹரிபிரசாத் சர்மா- prepared by panchadcharan swaminathasarma

பூணூல்
Scroll to top