மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?

மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே
போகிறது?

சனாதன தர்மம் சாஸ்திரம்

ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும் அடுத்த மூன்று நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்கப்போவோர் வருவோரை பார்த்துக்கொண்டு நிற்கிறது.

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து சாஸ்திரம் கூறுகிறது.

11வது 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது.

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்துச்செல்ல தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் பகலிலும் இரவிலும் செல்கிறது.

1 காத தூரம் = 10 mile
ஆக 247 தடவை 10 mile = 2470 mile பகல் மற்றும் இரவு 2470 mile = 4940 mile ஒரு நாளுக்கு

4940 தடவை 365 நாட்கள் ( ஓரு வருடம்)= 1,803,100 mile ( 29010808.1664 Km)

இவ்வாறு நடந்து செல்லும்பொழுது அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும் பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன் மாதத்தில் ஒரு நாள் அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும்.

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின் ஒவ்வொரு மாதமுமம் இறந்த திதியன்று மாசிகாபிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க உங்களை வாழ்த்தும்.

இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது.

உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுபகாரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின் கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின் சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

No photo description available.
மரணத்திற்கு பின் ஜீவன் எங்கே போகிறது?
Scroll to top