சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில், அருகில் உள்ள சிவாலயம் சென்று, சிவனாரையும் நந்திதேவரையும் வணங்கி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி பரவும்.

சிவனாருக்கு உகந்த பூஜைகளில், பிரதோஷ பூஜை மிக மிக முக்கியமானது. இந்தநாளில், அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று தரிசிப்பது மிகுந்த பலன்களைத் தரும். சுக்கிர வார பிரதோஷம் சிறப்பு வாய்ந்த்து. மறக்காமல், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்யுங்கள்.

சிவபெருமானுக்கு பிரதோஷ நாளில் பூஜை என்பது மகோன்னதமானது. குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், பிரதோஷம் வருவது கூடுதல் சிறப்பு. அப்போது பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவனாரை தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், இறையருளும் குருவருளும் கிடைப்பது உறுதி. இதேபோல், சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில், பிரதோஷம் வருவதும் சுபிட்சம் தருவது. ஐஸ்வர்யம் பெருகும் என்பது உறுதி.

அபிஷேகத்துக்கானப் பொருட்களை வழங்குவது இன்னும் புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே பிரதோஷ நாளில், சிவனாருக்கும் நந்திதேவருக்கும் அபிஷேகப் பொருட்களை வழங்கி தரிசியுங்கள்.

அதுமட்டுமா? சிவனாருக்கு வில்வமும் நந்திதேவருக்கு அருகம்புல்லும் சார்த்துங்கள். பிரதோஷ பூஜையைக் கண்ணார தரிசித்தால், நம் பாவங்கள் அனைத்தும் தொலையும்; புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

இறையருளையும் குருவருளையும் பெற்று இனிதே வாழலாம். இல்லத்தில் சுபிட்சம் நிலவும். உள்ளத்தில் நிம்மதி பரவும்!

No photo description available.
சிவபெருமானுக்கு உரிய பிரதோஷ நாளில்……….
Scroll to top