தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
ஞானத்தைத் தேடி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குரு. ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ‘ஆதி குரு’ அல்லது ‘ஞான குரு’ என்று போற்றப்படுகிறார்.
தேவர்களின் சபையில் தேவர்களுக்கு ஆச்சார்யராகத் திகழ்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரகஸ்பதி. ஆசிரியர் பணி புரிவதால் அவரை குரு என்று அழைக்கின்றனர்.
பிரகஸ்பதி!