தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இன்று பலரும் புருவ மத்தியில் பொட்டு இடுவதை பார்த்திருப்பீர்கள். இது பற்றி பிரம்மஸ்ரீ ஷேஷாதிரிநாத சாஸ்திரிகள் என்ன சொல்கிறார் என்று பாப்போம்:-
புருவ மத்தியில் பொட்டு வைத்துக் கொள்ள லாம், தவறில்லை. புருவ மத்யம், உடம்பில் இருக்கும் மர்ம ஸ்தானங்களில் ஒன்று. அதன் பாதுகாப்புக்குப் பொட்டு உதவும். மஞ்சளில் உருவெடுத்த குங்குமம் தோல் வியாதியை அண்ட விடாது. அங்கு ரோமம் வளராமலும் இருக்கும்.
ஒரு விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வராமல் தவிப்பவன், தன்னையும் அறியாமல் அவன் விரல் புருவ மத்யத்தைத் தட்டும். சிறிது நேரம் கழித்து ஞாபகம் வந்துவிடும். அங்கு தட்டினால் ஞாபகம் வரும் என்ற நம்பிக்கை எப்படியோ புகுந்துவிட்டது.
திருமணத்தில் கணவனோடு சங்கமமாகும் கன்னிகையின் புருவ மத்யத்தை, தர்ப்பையால் தடவி விடப் பரிந்துரைக்கும் தர்மசாஸ்திரம் (இதமஹம் யா…). கணவன் வீட்டில் புதியவர் களைச் சந்திக்கும் தருணத்தில் அவளது சிந்தனை, சிக்கலின்றிச் செயல்படும் வாய்ப்பையும் அது ஈட்டித்தரும். திருமண், திருநீறு, சந்தனம், சாந்து போன்றவை முகத்துக்கு அழகோடு சுகாதாரத்தையும் தருகிறது. பாபம் போகும், தூய்மை பெறும், செயல்பாடு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறும் (மிருத்திகே ஹனமே பாபம்…) மஞ்சள் மங்கலப் பொருள். அதில் உருவான குங்குமம், மங்கலம் தரும். எனவே குங்குமம் இட்டுக்கொள்வது சிறப்பு.
அப்படியான குங்குமத்தைகூட புருவ மத்தியில் திலகமாக இடுவதில் தவறில்லை!