தெரிந்து கொள்வோம் நண்பர்களே:;
சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையைச் சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. ‘நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:).சிவத்தின் இணைப்பால், உமா தேவிக்கு ‘ஸர்வமங்கலா’ என்ற பெயர் கிடைத்தது.கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிவிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவது இல்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப் படுகிறோம்!
‘பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப் பார்… என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை’ என்று சொல்லாமல் சொல்கிறது சிவ லிங்கம். ‘வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும்’ என்கிறது உபநிடதம் (த்யாகே நைகே அமிருதத் வமானசு:). லிங்கத்தில் எதை அர்ப்பணித் தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது; அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால், அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும்.
–நன்றி:;சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.