துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம்.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. ராகுகால வேளையில் துர்காதேவியை மனதில் தியானித்து, நெய்தீபம் ஏற்றிவைத்து, நீலோத்பல மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

துர்கையை ஒன்பது துர்கை களாகப் பெயரிட்டுக் கூறுகின்றது. மந்திர சாஸ்திரம். அவை: குமாரி, த்ரிமூர்த்தி, கல்யாணி, ரோஹிணி, காளிகா, சண்டிகை, சாம்பவி, துர்கா, சுபத்ரா.அதேபோன்று சுவாஸினி பூஜையிலும் சைலபுத்ரி, ப்ரம்ஹ சாரிணி, சந்த்ரகண்டா, கூஷ்மாண்டா, மகாகௌரி, காத்யாயனி, காளராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி ஆகிய ஒன்பது துர்கையர் இடம் பெறுகின்றனர். அம்பிகைக்கு உரிய விசேஷ காலங்களில், இந்த திருநாமங்களைக் கூறி போற்றிச் சொல்லி வழி படுவதால், வேண்டும் வரங்கள் யாவும் கிடைக்கும்.

துர்கா தேவிக்கு மிகப்பிடித்த. புஷ்பம் நீலோத்பலம்.
Scroll to top