தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மருத்துவக் குறிப்பு:-
உடம்பு கொஞ்சம் பூசினாற்போல இருந்தாலே தைராய்டு பிரச்னையாக இருக்கலாம் என்பார்கள். கழுத்துப்பகுதி வீங்கியிருந்தாலும் அது தைராய்டு குறைபாட்டின் அறிகுறி என்பார்கள். அந்த அளவுக்குத் தைராய்டு மீதான பயம் அதிகரித்திருக்கிறது.
செய்துபாருங்கள் செல்ஃப் டெஸ்ட்:–
முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபடியே, தண்ணீர் குடியுங்கள். தொண்டைக்குழிப் பகுதியைக் கவனியுங்கள். தலையை லேசாகப் பின்பக்கம் சாயுங்கள். சாதாரண நிலையில் தண்ணீர் குடிக்கும் போது உங்கள் தொண்டைக்குழியானது மேலெழும்பி பிறகு உள்ளே போகும். தண்ணீரை விழுங்கும்போது தொண்டைக்குழியில் ஏதாவது கட்டியோ, வேறு ஏதேனும் அசாதாரணமான அறிகுறியோ தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
ரத்தப்பரிசோதனை மூலம், மருத்துவர் தைராய்டு குறைபாடு இருக்கிறதா இல்லையா என உறுதி செய்வார். அதற்கான சிகிச்சைகளைச் சில மாதங்கள் தொடர்வதன் மூலம், முழுமையாக இப்பிரச்னையைச் சரிசெய்யலாம்..
—-மருத்துவ இதழ் ஒன்றிலிருந்து: