விநாயகர் சதுர்த்தி

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

அண்மிக்கும் விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அவ்வப்போது ஆன்மிக இதழ்களின் தொகுப்பு இங்கு பதிவேற்றம் செய்யப் படுகிறது அந்த வகையில் இன்று:

`பார்வதிதேவி, நீராடும் வேளையில் தனது பாதுகாப்புக்காக ஒரு புதல்வனைத் தோற்றுவித் தாள். அவரே நாம் வணங்கும் பிள்ளையார்’ என்கிறது சிவபுராணம். எனவே, அவர் நீர் நிலைகளின் கரையில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. ‘முதல் படைப்பு நீர்!’ என்கிறது வேதம். பரம்பொருளில் முதல் தோற்றம் பிள்ளையார். முதலும் முதல்வனும் அருகருகே இருப்பது சிறப்பு தானே.

சைதன்யமும் ஜடப்பொருளும் சேரும்போது… அதாவது, சிவனும் பார்வதியும் சேரும்போது புதுப் பொருள் ஒன்று தோன்றும். அப்படித் தோன்றி யவரே முழுமுதற் கடவுளான பிள்ளையார். நீரில் அத்தனை தேவதை களும் குடிகொண்டுள்ளன என்று வேதம் கூறும் (ஆபோவை ஸர்வா தேவதா). அத்தனை ஜீவராசிகளது மொத்த உருவம் பிள்ளையார். மனித ரூபமும் விலங்கு ரூபமும் இணைந்த வடிவானவர். எல்லா உயிரினங்களும் தன்னுள் அடக்கம் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.
நன்றி: சேஷாத்திரி நாத சாஸ்திரிக

விநாயகர் சதுர்த்தி
Scroll to top