தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை. சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் முக்கண்களாகப் பெற்றவர். துதிக்கை – படைத்தல், மோதகம் ஏந்திய திருக்கரம் – காத்தல், அங்குச கரம் – அழித்தல், பாசம் உள்ள கை – மறைத்தல், தந்தம் உள்ள கை அருளல்… இப்படி, அவரது ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிப்பது மட்டுமின்றி, ஐங்கரங்களும் ‘சிவாய நம’ என ஐந்தெழுத்து மந்திரத்தை உணர்த்தும் என்றும் சொல்வார்கள்.
எல்லா உலகங்களையும், உயிர்களையும் தன்னுள் அடக்கி, பாதுகாத்து அருள்வதை அவரது பேழை வயிறு உணர்த்துகிறது.
ஆக, தத்துவப்பொருளாகி உத்தம பலன்களை நமக்கருளும் நாயகனாய் திகழ்கிறார் வித்தகக் கணபதி!
விநாயகரின் திருவடிகள் இரண்டும் ஞானம், கிரியை எனும் சக்திகளை உணர்த்துபவை