வரதட்ஷனை வாங்குவதில்லை என்று தீர்மானம் போடுங்கள் பெற்றோர்களே!

தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:-

சக்தி வழிபாடுகள் நடைபெறும் இந்நேரத்தில் பிள்ளையை பெற்றவர்கள் ஒரு திட சங்கல்பம் மேற்கொள்ள வேண்டும்.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒரு காலும் வரதக்ஷிணை வாங்குவதில்லை என்று தீர்மானம் செய்ய வேண்டும். மற்ற விஷயங்கள் திருப்தியாக இருந்தால் கல்யாணத்தை முடிக்க முன்வர வேண்டும். வரதக்ஷிணை கேட்டால்தான் தங்களுக்கு மதிப்பு, வரதக்ஷணை கேட்காவிட்டால் தங்கள் பிள்ளைக்கு ஏதோ குறை என்று நினைப்பார்கள் என்பது போன்ற எண்ணங்களை விட்டு, எல்லோருக்கும் சந்தோஷம் தரும் வகையில் கல்யாணத்தை முடிக்க வேண்டும்.

தேசத்துக்காக, பாஷைக்காக, அரசியல் கொள்கைக்காக ஏதேதோ தியாகங்கள் செய்கிறார்கள். நம் தர்மத்துக்காக இந்த வரதக்ஷிணையை தியாகம் செய்யக்கூடாதா?

வரதக்ஷணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்துகிற வழக்கமும் தொலைய வேண்டும். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத் தான தர்மங்கள் செய்வதைவிட, பணக்காரர்கள் தங்கள் ஏழை பந்துக்களின் விவாகத்துக்குத் தாராளமான திரவிய உதவி தரவேண்டும்.

உரியகாலத்தில் தம் பெண் குழந்தைகளுக்கு கல்யாணமாகி ஸ்திரீ தர்மமும் சமூக தர்மமும் கெடாமலிருக்க வேண்டும் அனைவரும் முன் வர வேண்டும்..

வரதட்ஷனை வாங்குவதில்லை என்று தீர்மானம் போடுங்கள் பெற்றோர்களே!
Scroll to top