சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பரிகாசம் பண்ணாதீர்கள்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பரிகாசம் பண்ணாதீர்கள். எல்லாம் ஒரு காரணத்திற்காகத்தான் முன்னோர்கள் வகுத்துள்ளார்கள்.

நல்வழி காட்டும் சாஸ்திரங்கள்!!!
சாஸ்திரத்தை இன்று கடைபிடித்தால் நாளையே பலன் கிடைத்துவிடும் என்று எண்ணுவது தவறு.

போன மாதம் வேலை செய்ததற்கு இந்த மாதம் சம்பளம் வாங்குகிறோம். அதுபோல தான் சாஸ்திரங்களை கடைபிடிக்கும் போதே பெரிய முன்னேற்றம் தெரியவில்லையே என்று நினைக்கக் கூடாது. நல்ல விஷயங்கள் செய்து வரும்போது இன்று இல்லையென்றாலும் ஒருநாள் மாபெரும் வெற்றியை அடைய செய்கிறது. சாஸ்திரங்களை

நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன்தரும். எப்படி நிலக்கரி மண்ணுக்குள் அதிக வருடம் பொறுமையாக கிடந்து வைரமாக மாறுகிறதோ அப்படிதான் நம்பிக்கையும் நிச்சயம் வாழ்க்கையை வைரமாக ஜொலிக்கச் செய்யும்.

சாஸ்திரங்கள், சம்பிரதாயங்களை பரிகாசம் பண்ணாதீர்கள்
Scroll to top