தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசையால்………..

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசையால் நாடும் வீடும் ஒளிபெறும் நாளாகத்தான் எண்ணிக் கொண்டாடி வருகிறோம். தீபங்களின் வரிசையால் புற இருள் விலகினால் மட்டும் போதாது. நம் மனதை ஆக்கிரமித்திருக்கும் பொறாமை, சூது, வஞ்சகம், தானென்ற கர்வம் போன்ற தீய எண்ணங்களும் விலக வேண்டும்.

கிருஷ்ண பகவானின் திருவுளப்படி சத்யபாமாவால் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாளாக, நரகாசுரனின் விருப்பப்படி தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம்.

இருள் விலக ஒளி வேண்டும். அந்த ஒளிதான் கிருஷ்ண பரமாத்மா. அவர் அருளால் நாம் மன இருளைப் போக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம். இதை உணர்ந்து தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.

தீபாவளி என்பது ஐப்பசி மாதத்தில் வருவது. இந்த மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால், இது துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. துலாம் என்றால் தராசு முனையைப் போல் நடுநிலை தவறாமல் இருப்பது.

அப்படி சத்தியபாமா நடுநிலையில் நின்று, மகன் என்றும் பாராமல் நரகாசுரனை வதம் செய்ததால், துலாம் மாதமான ஐப்பசி மாதத்தில் தீபாவளிப் பண்டிகை வருவது மிகவும் பொருத்தம்தான்.

நன்றி. கே.குமார சிவாச்சாரியார்.-தமிழ்நாடு.

No photo description available.
தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசையால்………..
Scroll to top