‘அன்ன விசாரம் அதுவே விசாரம்

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

ஐப்பசியில் எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதன் மகத்துவம்:-

அன்னம் – வேதங்களாலும் உபநிடதங்களாலும் புகழப் படுவது. பட்டினத்தாா் ‘அன்ன விசாரம் அதுவே விசாரம்’ எனப் பாடுகிறாா்.

அன்னத்தைப் பற்றிச் சொல்லாத நூல்களே இல்லை எனும் அளவுக்குப் பெருமை மிகுந்தது அன்னம்.

ச்சே! என்ன இது சாப்பாடு… மனுஷன் சாப்பிடுவானா’ என்றெல்லாம் எந்த உணவையும் நிந்திக்கக் கூடாது. அதேபோல் அன்னத்தை வீணாக்குவதும் கூடாது என்கிறது வேதம்.

வேதத்தின் இந்தக் கட்டளை களை நாம் கடைப்பிடிக்கும் போது, ஈஸ்வரனின் மூச்சுக் காற்றான வேதம் நம்மைக் காப்பாற்றும். உண்ணும் உணவில் சகல ஜீவராசிகளுக் கும் பங்கு உண்டு.அன்னம் என்ற சொல்லுக்கு – உட்கொள் ளப்படுவது; உட்கொள்வது என்பது பொருள். அந்த உணவு அனைவருக்கும் உரியது. தனக்கென்று மட்டுமே சமைப்பவனைவிட்டு அன்ன லட்சுமி மெள்ள மெள்ள விலகிவிடுவாள் என்கின்றன ஞான நூல்கள்.

தட்ச சாபத்தின் மூலம் தினம் ஒரு கலையாகத் தேய்ந்து வந்த சந்திரன், சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சிவன ருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாகப் பெற்ற திருநாள் – ஐப்பசி பௌா்ணமி.

நாமும் சந்திரனின் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் ஐப்பசி பௌா்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடுகிறோம்.

மற்றொரு விசேஷமும் உண்டு. ஒற்றைச் சாதத்தை எடுத்துப் பாா்த்தால் தொியும். சிவலிங்கத்தைப் போலவே அதுவும் ஆதி அந்தம் இல்லாத தாகவே இருக்கும். எங்கு தொடக்கம் எங்கு முடிவு என்பது தொியாது. ஆகவே, அன்னாபிஷேகத்தன்று அன்னாபிஷேகத் திருக்கோலத் தில் அருளும் சிவனாரைத் தரிசித்தால், கோடிக்கணக்கான சிவலிங்கங்களைத் தாிசித்த பெரும் புண்ணியம் கிடைக்கும்.

நன்றி பி.என்.பரசுராமன் அவர்கள்.

தொகுப்பு:
பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா,
ஆன்மிக மின் இதழ் ஆசிரியர் ,(E magazine editor)
இந்து ஆகம நவீன கலை கலாச்சார நிறுவனம்,
Modern Hindu Culture.Org.
www.modernhinduculture.com
‘அன்ன விசாரம் அதுவே விசாரம்
Scroll to top