தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
இது ஒரு மருத்துவக் குறிப்பு:
நம்மவர்கள் பலர் நேரத்திற்கு உணவு உண்பதில் அலட்சியம் காட்டுவார்கள்.
நோய்கள் ஏற்பட்ட பின்னர் வைத்தியரிடம் ஓடுபவர்களும் உண்டு!!!
“காலையில சாப்பிட எங்கே நேரம் இருக்கு’’, “மதியம் கொஞ்சம்தான் சாப்பிட்டேன்’’, “நைட் லேட்டா சாப்பிட்டுப் பழகிடுச்சு’’ போன்ற வசனங்களை ஒரு நாளில் ஒருதடவையாவது கேட்டிருப்போம்; நாமேகூட சொல்லியிருப்போம்.
நம் உடலை ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் வைத்திருக்க உதவுவது உணவு. அதிலும், சரியான நேரத்துக்குச் சரியான உணவு உண்பதே உடலுக்கு நன்மை தரும்.
உணவைச் சாப்பிடாமல் தவிர்ப்பது எந்த அளவுக்கு உடல்நலத்தைப் பாதிக்குமோ, அதே அளவுக்கு நேரம் தாழ்த்தி உண்ணும் உணவும் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்.
–சஞ்சிகை ஒன்றில் இருந்து கிடைத்த தகவல்.
சரியான உணவு சரியான நேரத்திற்கு உண்ணவேண்டும்.