பிள்ளைகள்தான் பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்ய வேண்டும் என்று இல்லை!

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

சஷ்டியப்த பூர்த்தி ,சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் பெற்றோர்களுக்கு பிள்ளைகள்தான் செய்ய வேண்டுமா?

பிள்ளைகளை வைத்து சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்றவை எழவில்லை. அவை மனிதனாகப் பிறக்கும் ஒவ்வொருவரது உரிமை. அன்றைய தினம் தனது மகிழ்ச்சிக்கும், சுகாதாரத்துக்கும், நீடித்த ஆயுளுக்கும் பல இறையுருவங்களை வேண்டி வழிபாடு செய்கிறான். பண்டிகையோடும் கொண்டாட் டத்தோடும் இணைந்த வழிபாடுகளில், பலரும் கலந்துகொள்ள ஏதுவாகப் பல நிகழ்வுகள் கலந்திருக்கும்.

சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியன பிள்ளைகள் இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் பொருந்தும்.

இவை, பிள்ளைகளை எதிர்பார்த்து நடத்தும் நிகழ்வுகள் அல்ல. ஆடம்பரம் இல்லாமலேயே இந்த வழிபாடுகளை நடத்தலாம். 60 வயது நிரம்பியவர்களுக்கும் 80 வயது 10 மாதம் நிரம்பியவர்களுக்கும் இவை இரண்டும் உண்டு. பிள்ளைகள் செய்யவில்லை என்றால், தாங்களாகவே இந்த வைபவங்களை நடத்திக்கொள்ளலாம்.

இடையூறாக இருந்தால், அந்தத் தினத்தில் கடவுளை வணங்கி, இயலாமையை வெளிப்படுத்தி, அதன் நிறைவை அருளும்படி வேண்டிக்கொள்ளலாம்.

நன்றி: செஷாத்திரிநாத சாஸ்திரிகள்.

திரட்டியவர்:பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

No photo description available.
பிள்ளைகள்தான் பெற்றோருக்கு சஷ்டியப்த பூர்த்தி செய்ய வேண்டும் என்று இல்லை!
Scroll to top