தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
பல இடங்களில் நாம் அவதானித்து இருப்போம் பலர் பூமியை தொட்டு வணங்குவதை. நிகழ்ச்சிகள் ஏதும் மேடையில் நடைபெறும்போது,மேடை ஏறும்போது குனிந்து நிலத்தை தொட்டு வணங்குவார்கள். ஆலயங்களுக்கு செல்லும்போது கோபுரவாசலில் படியைத் தொட்டு வணங்கி செல்வார்கள். என் அப்படி வணங்குகிறார்கள் என்று பார்ப்போம்!
துயில் எழுந்ததும் பூமித் தாயைக் காலால் மிதிக்கிறோம். தாயைக் காலால் மிதிப்பது தவறு என்பது நமது எண்ணம். ஆகையால் எழுந்தவு டன் பூமிக்கு வணக்கம் செலுத்துவது வழக்கம். ‘பூமித் தாயே! மன்னித்துவிடு. நான் பல அலுவல் களில் ஈடுபட வேண்டியிருப்பதால் உன்னை மிதிக்காமல் செயல்பட இயலாது. எனது பாத ஸ்பரிசத்தைப் பொறுத்துக்கொள்!’ என்று பூமித் தாய்க்கு முதல் வணக்கம் அளிப்பது நமது மரபு.
கோயில் வாசலில் படியைத் தாண்டிப் போக வேண்டும். சிலர், படியில் கால் வைத்துப் போக நேரிடும். கால் வைப்பதும், தாண்டுவதும் மனதுக்கு நெருடலை உண்டுபண்ணும்.
கோயிலில் வீற்றிருக்கும் தெய்வத்தின் உடலாகக் கோயிலை நினைக்கிறோம். அப்போது அதன் வாசலில் இருக்கும் படியை மிதிக்கும்போது அபசாரமென்று மனம் எண்ணுவதுண்டு. அதைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுவதற்கு படி யைத் தொட்டு வணங்குகிறோம். அது மனதில் ஏற்பட்ட நெருடலால் வந்த செயல்.