காமாட்சி விளக்கு.

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

பல சந்தர்பங்களில், பல இடங்களில் நாம் காமாட்சி அம்மன் விளக்கு பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் பார்த்திருக்கிறோம்.

வீடுகளிலும் ஆலயங்களிலும், திருமண சமய நேரங்களிலும் காமாட்சி அம்மன் விளக்கை பார்த்திருக்கிறோம்.

அதன் முக்கியத்துவத்தை ஷண்முக சிவாச்சாரியார் அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்:

கா’ என்றால் சரஸ்வதி; ‘மா’ என்றால் லட்சுமி. `அட்சி’ என்றால் கண்கள். சரஸ்வதி, லட்சுமி ஆகியோரைக் கண்களாகக் கொண்டவள் காமாட்சி. ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, எப்படி வாழவேண்டும் என்பது பற்றிய தெளிவான அறிவு, பொருளாதார வசதி, உடல் ஆரோக்கியம் ஆகியவை அவசியம் வேண்டும். அவற்றை நமக்கு அருள்பவள்தான் காமாட்சி.
காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்படும்போது, அந்த இடத்தில் அம்பிகையின் அருளாற்றல் நிறைகிறது. ‘காம’ என்றால், ஆசை – விருப்பம் என்று பொருள். நம்முடைய நியாயமான விருப்பங்களை ஆள்பவளும் நிறைவேற்றுபவளும் அன்னை காமாட்சி.

எனவே, காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடும்போது, நம்முடைய வீட்டில் சகல மங்கலங்களும் நிறைவதுடன், வாழ்க்கையைப் பற்றிய தெளிவான அறிவும் நமக்குக் கிடைக்கும்.

prepared by panchadcharan swaminathasarma

காமாட்சி விளக்கு.
Scroll to top