தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அமெரிக்காவில் இருந்து நண்பர் , மதிப்புக்குரிய சிவஸ்ரீ. ரகுபதிகுரு அவர்கள் அனுப்பியது:-
இல்லற தர்மத்திலே ஒரு புத்திரன் பிறந்தால்,
#புத் என்கிற நரகம் கடையாது. இது சாஸ்த்ரத்தில் உள்ளது.
#பொண்ணபபெத்தவா!
“தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்மனச்ச லோத் தாரண த்வாரா
நித்ய நிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக அவாப்யர்த்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண”……
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.
தசாநாம் பூர்வேஷாம்:- எனக்கு முன்னால் உள்ள 10தலைமுறைகள் .
தசாநாம் பரேஷாம்:- எனக்குப் பின்னாலே வரக்கூடிய 10தலைமுறைகள்.
ஆத்மன் ச்ச:- என்னுடன் சேர்த்து
21 தலைமுறை என்குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கும் இந்த கன்னிகாதானம் உதவி செய்கிறது.
ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இதுவே மஹாதானம் ஆகும்.
#மஹாபெரியவாஅருள்!
“தெய்வத்தின் அருள் இருந்தால் *ஆண் குழந்தை*.
அந்த தெய்வமே நேரில் வந்தால் *பெண் குழந்தை*.”