தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
இன்று பல ஆலயங்களில் வசந்த நவராத்திரி விழா நடைபெறுவதை பார்த்திருப்பீர்கள்.
பங்குனி மாத அமாவாசைக்குப்பிறகு வரும் பத்து நாட்கள் வசந்த நவராத்ரி ஆகும். இலங்கையிலும் , புலம் பெயர்ந்த மக்களும்
மற்றும் தென் இந்தியாவில் சாரதா நவராத்ரியும் வட இந்தியாவில் வசந்த நவராத்ரியும் சிறப்பாக கொண்டாடப் படுகின்றன.
சாரதா நவராத்ரியின் முக்கிய அம்சம் பொம்மை கொலு என்றால், வசந்த நவராத்ரியின் சிறப்பு விரதமும் பூஜையும். தெற்கே நவராத்திரியின் கடைசி நாளான நவமி அன்று கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை பூஜிக்கிறார்கள், வட இந்தியர்களோ வசந்த பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்கிறார்கள்.
தெய்வ வழிபாடுகளை நாம் எப்போது மேற்கொண்டாலும் அதன் பலன்கள் நிச்சயம் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் கிடைத்த படியே இருக்கும் நண்பர்களே!
”யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:”